ஆன்லைனில் பாதுகாப்பாக இருத்தல் Keeping safe online
இணைய பாதுகாப்பு எனக்கு ஏன் முக்கியம்?
இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் தகவல்களைப் பகிரவும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவும் உதவும் அற்புதமான தளங்கள் ஆகும்.
இருப்பினும், குற்றவாளிகள் மற்றும் பிற சட்டவிரோத நிறுவனங்கள் உங்கள் பணத்தையும், உங்கள் தகவல்களையும் பெறுவதற்கு அல்லது உங்களை மிரட்டுவதற்கு அவற்றைப் பயன்படுத்துகின்றன.
அவர்கள் உலகில் எங்கிருந்தும் செயல்பட முடியும், பெரும்பாலான மொழிகளை சரளமாகப் பேச முடியும் மற்றும் நம்பத்தகுந்த போலி இணையதளங்களை உருவாக்க முடியும். அவர்கள் மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி மூலம் உங்களைத் தொடர்புகொள்வார்கள், மேலும் அவர்கள் நீங்கள் தெளிவாக சிந்திக்காமல் இருப்பதற்காக உங்களை பயமாகவோ அல்லது கவலையாகவோ உணர வைக்க முயற்சிப்பார்கள்.
இவை அனைத்தும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் தந்திரங்களை எப்போதும் அறிந்திருக்க வேண்டும் என்பதாகும்.
நான் ஆன்லைனில் சந்திக்கும் சில பொதுவான பிரச்சினைகள் என்ன?
இவைகள் நாம் காணும் மிக பொதுவான சூழ்நிலைகளில் சில.
- ஒரு இணைப்பைக் கிளிக் செய்யும்படி சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தியைப் பெறுவீர்கள்.
- இந்த இணைப்புகள் பெரும்பாலும் உங்கள் உள்நுழைவு அல்லது நிதி விவரங்களை திருட ஏதுவாக வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்களுக்கு செல்ல வழிவகுக்கும்.
- தனிப்பட்ட தகவலைக் கேட்கும் ஒரு சந்தேகத்திற்கிடமான அழைப்பைப் பெறுவீர்கள்.
- மேலே குறிப்பிட்டுள்ளபடி, அழைப்பாளர் உங்கள் வங்கியில் இருந்து அழைப்பதுபோல் பாவனை செய்து தகவல் கேட்பார்.
- அதிகாரம் உள்ள நபரை போன்று நடித்து, உங்களை ஏதாவது செய்ய வைக்க முயற்சிக்கும் ஒருவரிடமிருந்து நீங்கள் தகவல்தொடர்பை பெறுவீர்கள்.
- பெரும்பாலும் அந்த நபர் ஒருவித அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்.
- யாரோ ஒருவர் உங்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆன்லைன் கணக்குகளில் நுழைவார் (உதாரணமாக: மின்னஞ்சல் அல்லது சமூக ஊடகம்).
- யாராவது ஒருவர் உங்கள் ஆன்லைன் கணக்கிற்குள் நுழைந்தால், அவர்களால் உங்கள் தகவலைத் திருடவும், பணம் செலுத்தலை அவர்கள் கணக்கிற்கு திருப்பிவிடவும் முடியும். மேலும் அவர்கள் உங்களைப் போன்று நடித்து உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரைக் குறிவைக்கலாம்.
- உங்கள் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்படும் அல்லது போலியான விற்பனை அல்லது முதலீட்டில் உங்கள் பணத்தை இழந்து விடுவீர்கள்.
- மோசடி செய்பவர்கள் நீங்கள் ஒரு நல்ல ஒப்பந்தம் என்று நம்பி சிந்திக்காமல் பணம் செலுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். அல்லது ஒரு உண்மையான இணையதளம் தரவு முறிவில் சிக்கி உங்கள் விவரங்கள் ஆன்லைனில் கசியலாம்.
இன்னும் பல சூழ்நிலைக்காட்சிகள் இங்கே உள்ளன: இப்போது உதவி பெறவும் - உங்களுடைய ஆன்லைனை உங்களுடையதாக்குங்கள்
நான் ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
நான் ஏமாற்றப்பட்டால் அல்லது அதைவிட மோசமாக இருந்தால் நான் என்ன செய்வது?
உதவியை நாட உங்களுக்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. நீங்கள் உங்களுடைய சம்மதத்தை தெரிவிக்காத வரை, இந்த நிறுவனங்கள் அனைத்தும் உங்கள் விவரங்களை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளாது.
- நீங்கள் CERT NZ போர்டல் மூலம் NCSC-க்கு இணையச் சம்பவங்களைப் புகாரளிக்கலாம், நாங்கள் உங்களுக்கு உதவலாம் அல்லது மற்றொரு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளலாம்: ஒரு சம்பவத்தை தெரிவிக்கவும் | CERT NZ
- நீங்கள் பணத்தை இழந்திருந்தால், உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.
- மோசடி குறுஞ்செய்திகளை, உள்நாட்டு விவகாரத் துறையால் நடத்தப்படும் சேவையான 7726-க்கு இலவசமாக அனுப்பலாம்.